|
உணவுப் பேருந்து சென்னையில் அறிமுகம் Jan 7, 11 |
|
தென்னிந்தியாவின் முதல் மாடிப்பேருந்து நகரும் உணவு விடுதி சென்னையில் இன்று கோலகலமாக அறிமுகம் செய்யபட்டது.
"ஹைஜாக்" என்று அழைக்கப்படும் இந்த உணவுவிடுதிப் பேருந்தை மாய்ஸ்ட் கிளே என்டெர்டெய்ன்மென்ட் அன்ட் மீடியா பிளே தனியார் நிறுவனமும் இதன் கூட்டாளியுமான மூவிங் கார்ட்டும் இதனை சென்னையில் இன்று அறிமுகம் செய்தன.
கீழ்ப்பகுதி முழுதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது, மாடிப்பகுதி திறந்தவெளி இருக்கை வசதிகளை உடையது.
இந்தப் பேருந்தில் மொத்தம் 44 இருக்கைகள் உள்ளன. உணவு அருந்த வசதியாக மேஜைகள் போடப்பட்டுள்ளன. இதில் சகல வகையான உணவுகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
source : Webdunia |
|
|
|
|
|