Nagaratharonline.com
 
மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா நாளை துவக்கம்  Jan 7, 11
 
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை 11.08 மணி முதல் மதியம் 11.32 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.

ஜன.,20 வரை நடக்கும் திருவிழாவில், தினமும் காலை, இரவில் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் உலா வருகின்றனர். ஜன.,18ல் தீர்த்தம், தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், ஜன.,19ல் சிந்தாமணியில் கதிரறுப்புத் திருவிழாவும் நடக்கிறது. ஜன.,20 ல் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று காலை 10.28 முதல் 10.42 மணிக்குள் தெப்பத்தில் எழுந்தருளி, இருமுறை வலம் வருகின்றனர். பின், இரவு 8 மணிக்கு ஒருமுறையும் வலம் வருகின்றனர். இரவு 10 மணிக்கு சுவாமி தங்கக்குதிரை வாகனத்திலும், அம்மன் அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி, மீனாட்சி கோயிலுக்கு புறப்படுகின்றனர்.

அம்மனும், சுவாமியும் கோயிலுக்கு திரும்பும் வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

source : Dinamalar