Nagaratharonline.com
 
ஹைதராபாத், கோவாவுக்கு 15-ல் சுற்றுலா ரயில் - கட்டணம் ரூ. 3,591  Jan 8, 11
 
சென்னை, ஜன. 8: சென்னையில் இருந்து கோவா, ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா ரயில் சேவையை ஜனவரி 15-ம் தேதி இந்திய ரயில்வே உணவு- சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) இயக்க உள்ளது.

எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு சுற்றுலா ரயிலில் கோவா, ஹைதராபாத் ஆகிய பல்வேறு இடங்களுக்கு செல்லும். இந்த 7 நாள் சுற்றுலா பயணத்துக்கு நபருக்கு கட்டணம் ரூ. 3,591. இந்தத் தொகையில், 2-ம் வகுப்பு (தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில்) பயணக் கட்டணம், 3 வேளை சைவ உணவு, உள்ளூர் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பஸ் வசதி, தங்கும் இட வசதி ஆகியவையும் அடங்கும். இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. சுற்றுலா தகவல் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இதற்கான தொ.பே. எண்கள்: 044-64594959, 25330341, 9003140681

source : Dinamani