Nagaratharonline.com
 
NEWS REPORT: மார்கழி ஊழல் பஜனை!  Jan 8, 11
 
உலகமே கொண்டாடுகிறது 'சர்வ தேச ஊழல் ஒழிப்பு தினம்' (December 9)

ஆனால், அது இந்தியாவுக்கு இல்லை! வெட்கம்!

அன்று போஃபர்ஸ் தொடங்கி, இன்று காமன்வெல்த் விளையாட்டில் - விளையாடி - 2ஜி சப்க்ட்ரம் அலை வரிசையில் கைவரிசை காட்டி ,கார்கிலில் வீர மரண மடைந்த `வீரர்' குடிருப்பில் கரையான்கள் கட்டும் புற்றில் கருநாகங்கள் இருப்பதுபோல், மற்றும் புறப்பட்டதே ஓர் புது பூதம்! எல்.ஐ.சியின் விட்டுக் கடன்களில் முறை கேடு!

தெருக்களில் டாஸ்மாக்கின் அட்டகாசம், இதற்குதான் பாவம், காந்தி, எந்த பெயரிலும் 'குடி' மக்களுக்கு தேவை இல்லை என்றார். ஆனால் இன்றோ ’குடி’ இல்லை எனில் மக்களின் 'ஓட்டே' இல்லை என்கின்றனர்... யார்?
குடி மக்களா...? மேல் குடி மக்களா...?

முப்பெரும் தமிழகம் முப்பெரும் தேவியர் முக்கனிகள், முக்காலமும் அறிந்த முனிவர்கள் என எக்காலமும் கொண்டாடும் நமக்கு இக்கால முப்பெரும் ஊழலைத் தடுக்க எந்த சக்தியுமே இல்லையா...? அல்லது ஊழல் தந்த பண பெரும் சக்தியால் அனைவர் வாயிலும் வலிமையான பூட்டும், சாவி ஊழலின் கையிலேயா...?


இது என்ன ஊழல்களின் 'புரட்சிப் பொற்காலமா?' இதைக் கேட்க தடுக்க, தினம் நடக்கும் பாராளுமன்ற அமளி, மேலிடத்தின் காதில் கேட்கப்படுமா...?அல்லது அதிகார பேச்சு ஆணவ நடவடிக்கையால் மேல் சபையே ஒடுக்கப் படுமா?


சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம், டிசம்பர் 9-ம் நாள் அதற்குள் ஏதேனும் ஓர் ஒளி தெரியுமா? இந்திய மக்களுக்கு...
அல்லது மார்கழி பஜனையில் சேர்க்க

ஊழலே கோவிந்தா! இந்தியவே கோவிந்தா!

மக்களே கோவிந்தா! எல்லோருக்கும் கோவிந்தா! கோவிந்தா எனலாமா...!!


source : Chennai livenews