|
மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி ஆக்கிரமிப்பு பக்தர்கள் அவதி Jan 10, 11 |
|
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி, தெருவோர, பிளாட்பார கடைகள் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் நடந்து வருவதில் சிரமம் ஏற்படுகிறது. சபரிமலை சீசன் காரணமாக, இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். போக்குவரத்திற்கு தடை உள்ள சித்திரை வீதி பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து பாசி, பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற விற்றனர். இதனால் பக்தர்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.தற்போது கோயிலுக்கு வரும் பாதைகளான அம்மன் சன்னதி தெரு, கீழசித்திரை வீதி, மீனாட்சி கோயில் தெரு, நேதாஜி ரோடு, தொட்டியன் கிணற்று சந்து ஆகியவற்றிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி, போலீசார் அகற்றவேண்டும்.
source : Dinamalar |
|
|
|
|
|