|
மீனாட்சி அம்மன் கோயிலில்10 கிலோ "தங்கத் தொட்டில்' Jan 16, 11 |
|
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 10 கிலோ எடையில் தங்கத்தொட்டில், அமைக்கும் பணிகள் விரை வில் துவங்கும், என கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன் தெரிவித்தார்.
மீனாட்சி அம்மன் கோயில் தகவல் மையம் திறப்பு விழாவில், அவர் கூறியதாவது:கோயில் தகவல் மையத்தில், தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பக்தர்கள் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். பூஜை, நடைதிறக்கும் நேரம், கட்டணம், தங்கும் வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் திருப்பரங்குன்றம், பழநி, ராமேஸ்வரம் உட்பட 16 கோயில்கள் குறித்த முழு விபரங்களையும் அறியமுடியும். கோயிலில் தங்க ரிஷப வாகனத்திற்கான வேலைகள் 15 நாட்களில் நிறைவடையும். அதன் பின் "ஞானப்பாலூட்டி நல்லதமிழ் பெயர் சூட்டி தங்கத் தொட்டிலில் தவழவிடும்' குழந்தைகளுக்காக 10 கிலோ தங்கத்தில் தொட்டில் மற்றும் 2 கிலோ தங்கத்தில் அபிஷேக கலயம் அமைக்கும் பணிகள் நடைபெறும்.
source : Dinamalar |
|
|
|
|
|