Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டியில் தமிழர் திருநாள் கருத்தரங்கம்  Jan 21, 11
 
திருப்பத்தூர், ஜன. 20: திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழ் மன்றம் சார்பில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சி.டி.எஸ்.சிதம்பரம் தலைமை வகித்தார். கவிஞர் அரு.நாகப்பன் முன்னிலை வகித்தார். கவிஞர் சிவல்புரி சிங்காரம் கருத்தரங்கு நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். முதல் நிகழ்வாக மகளிர் பட்டிமன்றம் நடைபெற்றது.

பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பது ஆதிக்கமே, என்ற தலைப்பில் ஜீவா பழனிவேலு, செல்வி மகேஸ்வரி ஆகியோரும், அடிமைத்தனமே என்ற தலைப்பில் புதுகை விஜயா, லால்குடி ஜோதி ஆகியோரும் பேசினர். நடுவராக சரஸ்வதி நாகப்பன் இருந்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்குக்கு பேராசிரியர் தேனப்பன் தலைமை வகித்தார். புதுகை காவல் துறை கண்காணிப்பாளர் முத்துச்சாமி துவக்கி வைத்தார்.திருமயம் சட்டப் பேரவை உறுப்பினர் ரா.ம.சுப்புராம் முன்னிலை வகித்தார்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தலைப்பில் ரா.சொக்கலிங்கமும், நாளும் நட்பும் என்ற தலைப்பில் நாச்சம்மை கண்ணனும் சிறப்புரையாற்றினர். நெஞ்சுக்கு நிம்மதி தருவது குடும்பமே, என்ற தலைப்பில் நாவலர் துரைப்பாண்டியனும், சங்கீத் ராதாவும், கோயிலே என்ற தலைப்பில் ஆனந்த அபூர்வசாமியும், ஜோதிராஜனும் பேசினர்.

நடுவராக குன்றக்குடி பெருமாள் இருந்தார். அதனைத் தொடர்ந்து கலைநிகழ்சிகள் நடைபெற்றன.

Source:Dinamani