Nagaratharonline.com
 
ஜன. 30 காரைக்குடியில் கவியரசர் கண்ணதாசன் விழா: கட்டுரை, பேச்சு, கவிதைப் போட்டிகள்  Jan 25, 11
 
காரைக்குடி, ஜன. 24: காரைக்குடியில் நடைபெற உள்ள 22-ம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் விழாவையொட்டி மழலையர் வகுப்பு மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பாடல் ஒப்பித்தல், கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகள் ஜன. 30-ம் தேதி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

மழலையர் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை கவியரசர் கண்ணதாசன் திரைப்பட பாடல்களில் ஏதேனும் ஒன்றை ஒப்பித்தல் வேண்டும்.

பேச்சுப் போட்டியில் 7,8 வகுப்புகளின் மாணவ, மாணவிகள் கண்ணதாசனும் தேசபக்தியும் என்ற தலைப்பிலும், 9,10 வகுப்பு மாணவ, மாணவிகள் கண்ணதாசன் பாடல்களில் சமுதாய உணர்வு என்ற தலைப்பிலும்., 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கண்ணதாசன் பார்வையில் ஒரு தத்துவம் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்கள் கண்ணதாசன் பாடல்களில் இன்பச்சுவை என்ற தலைப்பிலும் பேசவேண்டும்.

கல்லூரி, பல்கலை. மாணவர்கள் எங்கள் நெஞ்சில் கண்ணதாசன் என்ற தலைப்பில் 48 வரிகளுக்கு மிகாமல் கவிதைப் போட்டியிலும், கண்ணதாசன் சமூகச் சிந்தனையாளன் என்ற தலைப்பில் (4 பக்கங்களில்) கட்டுரைப் போட்டியிலும் பங்கேற்கவேண்டும்.

பாரதி விழா போட்டிகள்: 1 முதல் 6 வகுப்புகள் வரை பயிலும் மாணவர்கள் பாரதியின் தேசப்பக்தி பாடல்களில் ஏதேனும் ஒன்று.7, 8-ம் வகுப்பு மாணவர்கள் பாரதியின் பக்திப்பாடல்கள் ஏதேனும் ஒன்று.10-ம் வகுப்பு மாணவர்கள் பாரதியின் பல்சுவைப்பாடல் பகுதியில் சமூகச் சிந்தனைப் பாடல்களில் ஏதேனும் ஒன்று ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்வேண்டும். 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பாரதியின் தேசப்பற்று என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியிலும், பாரதி காட்டும் பெண்ணுரிமை என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களும் பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம்.

பொதுமக்களுக்கான இசைப் போட்டிகளில் கண்ணதாசனின் திரைப்படப்பாடல்களில் ஏதேனும் ஒன்றைப் பாடவேண்டும்.

பங்குபெற விரும்பும் மாணவ, மாணவிகள் கல்வி நிறுவனங்களின் உரிய சான்றிதழுடன் பங்கேற்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு கவியரசர் கண்ணதாசன் சமூக நல அறக்கட்டளை பொதுச்செயலர் கவிஞர் அரு.நாகப்பன் செல் எண்: 9443142113 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Source:Dinamani