Nagaratharonline.com
 
துர்நாற்றம், நெரிசலில் காரைக்குடி பஸ் ஸ்டாண்ட்  Jan 29, 11
 
காரைக்குடி பாலிதீன் தடை செய்யப்பட்ட நகராக மாறுகிறதோ இல்லையோ; துர்நாற்றம், நெரிசல் மிக்க தூசி நகராக மாறிவிட்டது.

ஆக்கிரமிப்பு: கோவிலூர்- போலீஸ் முதல் "பீட்' ரோடு சந்திப்பு, பஸ்கள் இடதுபுறம் திரும்பும் இடத்தில் கடைகள் ஆக்கிரமிப்பால், புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள் நெரிசலில் சிக்கி கொள்கின்றன. நுழைவு வாயிலில் வாடகை கார்கள் நிறுத்தப்படுவதால், பஸ்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

சுகாதாரகேடு: பின்புறம், நகராட்சி சைக்கிள் ஸ்டாண்ட் அருகே திறந்த வெளி கழிப்பிடமாக இருப்பதால், பயணிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். பெண்களுக்கு கழிப்பறை இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.பஸ் ஸ்டாண்ட் முன், ஒரு பகுதியில் சிமென்ட் ரோடு போடப்பட்டது. மற்றொரு புறத்தில் ரோடு புதுப்பிக்கப்படவில்லை. இதையும் உடனடியாக சீரமைக்க வேண்டும்.

ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பஸ் ஸ்டாண்டிற்குள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு என்ன?உள் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நுழைவு வாயிலில் வாடகை கார்களை நிறுத்த அனுமதிக்க கூடாது; தனி இடம் ஒதுக்க வேண்டும். பகலில் பஸ் ஸ்டாண்டிற்குள் லாரிகள் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும். வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்க வேண்டும்.

source : Dinamalar