Nagaratharonline.com
 
கோயில்களில் இந்து திருமணத்தை பதியலாம் : பதிவாளர் உத்தரவு  Jan 30, 11
 
கோயில்களில் திருமணம் செய்யும் இந்துக்கள், அங்கு திருமணத்தை பதிந்து சான்று பெறலாம்,'' என மாவட்ட பதிவாளர் பிரான்சிஸ் சேவியரம்மாள் கூறினார்.



அவரது அறிக்கை, ""இந்து கோயில்களில் திருமணம் செய்யும் இந்து மதத்தை சேர்ந்த தம்பதிகள், தங்களது திருமண பதிவினை அந்தந்த பகுதி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதியவேண்டும். அதனால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, அவர்கள் திருமணம் முடிக்கும் கோயில்களிலேயே திருமணத்தை பதிய பத்திரபதிவுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, அந்தந்த கோயில் நிர்வாக அலுவலரே திருமண பதிவாளர்களாக செயல்படுவர். எனவே கோயில்களில் திருமணம் முடிப்போர் அங்கு பதிந்து, சான்று பெற்றுக்கொள்ளலாம்,'' என்றார்.

source : Dinamalar