|
திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா Feb 11, 11 |
|
திருப்புத்தூர்:திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில : இக்கோயிலில் ஆண்டுதோறும் தெப்ப உற்சவம் நடைபெறும். வைணவ தலங்களில் மிகவும் சிறப்பு பெற்ற உற்சவத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.கடைசி மூன்று நாட்கள் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். . பிப்., 18ல் தெப்பம் நடைபெற உள்ளது. .
.போக்குவரத்து குளறுபடியால் கடந்தாண்டு 3 கி.மீ., தொலைவிற்கு வாகனங்கள் நெருக்கடி காணப்பட்டது. இதை தவிர்க்க ஒரு வழிப்பாதையை அமல்படுத்த வேண்டும். சிவகங்கையிலிருந்து வரும் வாகனங்கள் ஊத்துப்பட்டி, தானிப்பட்டி வழி திருப்புத்தூர் செல்லவும்; மதுரை, திருப்புத்தூரிலிருந்து வரும் வாகனங்கள் சுண்ணாம்பிருப்பு, குண்டேந்தல்பட்டி, பிராமணம்பட்டி வழி செல்ல வேண்டும். இவற்றை ஒரு வழிப்பாதையாக்க வேண்டும். தனியார் வாகனம் நிறுத்துமிடத்தை திருப்புத்தூர், குண்டேந்தல்பட்டி, அரளிக்கோட்டை, எம்.புதூர் பகுதிகளில் உருவாக்கலாம். அங்கிருந்து சிறப்பு பஸ்கள் மூலம் திருக்கோஷ்டியூர் செல்ல அனுமதிக்கலாம்.பக்தர்கள் கோயிலுக்கு செல்வதை முறைப்படுத்தி நெருக்கடியை தவிர்க்க வேண்டும். சாதாரண மற்றும் சிறப்பு வரிசைகளை மூலவர் சன்னிதானத்திற்கு முன்பே இணைக்க வேண்டும். பிறகு தாயார் சன்னதி வழி, ஒருங்கிணைத்து தெற்கு வாசல் வழி வெளியேற அனுமதிக்கலாம். கோயிலுக்கு முன் பக்தர்கள் வரிசையாக செல்வது அவசியம். தெப்பக்குளத்திலிருந்து கோயில் வரை தேவையான விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குளத்தினருகே நெய் விளக்கேற்ற வருபவர்களுக்கு பாதுகாப்பாக, தடுப்பு அமைக்க வேண்டும்.
source : Dinamalar |
|
|
|
|
|