Nagaratharonline.com
 
திருவொற்றியூர் மாசி மக பூஜை நாளை தொடக்கம்  Feb 12, 11
 
சென்னை திருவொற்றியூரில் 14-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கும் மாசிமக பூஜைக்கு பவளக்காரத் தெருவில் உள்ள புது தண்டாயுதபாணி, பழைய தண்டாயுதபாணி கோயில் நகரத்தார் விடுதிகளிலிருந்து ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருவொற்றியூருக்கு எழுந்தருளுகிறார். அன்று காலை 9-15 மணியளவில் வெள்ளி ரதத்திலும், இந்திர விமானத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகச் செல்கின்றனர். மாசிமகத் திருவிழா 18-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

திருவொற்றியூர் நகரவிடுதியில் பிப்.15, 16-ம் தேதிகளில் மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது. 17-ம் தேதி மகிழடி சேவை; 18-ம் தேதி வெள்ளிக்கிழமை பூஜை முடிந்து தியாகராஜப் பெருமான் ஆலயப் பிரதட்சணமாக மீண்டும் பவளக்காரத் தெரு நகர விடுதிகளுக்கு ஸ்ரீ தண்டாயுதபாணி எழுந்தருளுகிறார். விழா நாள்களில் பகலில் அன்னதானம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இரண்டு தண்டாயுதபாணி டிரஸ்டிகள் செய்துள்ளனர்.

source : Dinamani