|
வீட்டடி மனையாகும் விளைநிலங்கள் சென்ட் ரூ.3 லட்சம் Feb 15, 11 |
|
மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் உள்ள பெரும்பாலான விளை நிலங்கள் வீட்டடி மனைகளாகின்றன. அனுமதியின்றி விற்கும் நிலங்களை வாங்கவேண்டாம் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்து வருகிறது. இதையும் மீறி, பதிவு அலுவலகங்களில் பதிகின்றனர். ஆனால், பட்டா வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அங்கு கேட்டால், வருவாய்த்துறை அனுமதியில்லாத இடங்களுக்கு பட்டா தரமுடியாது என பத்திர பதிவு அலுவலகத்தில் தெரிவிக்கின்றனர்.
இது போன்று ரியல் எஸ்டேட்காரர்களின் பேச்சை நம்பி, அனுமதியில்லாத வீட்டடி மனைகளை பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர். அவர்கள் பிளான் அப்ரூவல் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். இதனால், பிளாட் போட்டு விற்றவர்கள் செலுத்தவேண்டிய வரிகள் அனைத்தும், வீட்டு மனை வாங்கியோர் தலையில் விழுகிறது. நான்கு வழிச்சாலை வரவிருப்பதால், வாய்ப்பை பயன்படுத்தி, விளை நிலங்களை வீட்டடி மனைகளாக்கி, சென்ட் மூன்று லட்ச ரூபாய்க்கு விற்கின்றனர்.
source : Dinamalar |
|
|
|
|
|