|
ஓலைச்சுவடியில் ராமர் காவியம் Feb 20, 11 |
|
பழமையான ராமாயண ஓலைச்சுவடியை, காரைக்குடியை சேர்ந்த சொற்பொழிவாளர் அரு. சோமசுந்தரன் (67) பாதுகாத்து வருகிறார். முத்துப்பட்டணம் மூன்றாவது தெருவில் வசிக்கும் இவர் ஏராளமான புத்தகங்கள், பயணக்கட்டுரைகள் எழுதியுள்ளார். நகரத்தார் சமூக வாழ்வியல் குறித்து ஆய்வு செய்து வருகிறார். ராமாயணம், பாரதம், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், பாகவதம், சிலப்பதிகார சொற்பொழிவில் நிபுணத்துவம் பெற்றவர்.
ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட ராமாயணத்தை இவர் பாதுகாத்து வருகிறார். இரு பக்கத்திலும் ஒன்பது வார்த்தைகள் என, 500 க்கும் மேற்பட்ட சுவடிகளில், மொத்த புராணமும் எழுதப்பட்டுள்ளது. இது 150 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. அவர் கூறுகையில், ""நூறு ஆண்டுகள் வரை ஓலைச்சுவடிகள் சேதம் அடையாமல் இருக்கும். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், ராமநாதபுரம் மாவட்டம் சனவேலிக்கு சென்றபோது, புலவர் குடும்பத்தினர் இதை வழங்கினர். அவரது மூதாதையர்கள் சேதுபதி மன்னரிடம் பணிபுரிந்தனர். இதை பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறேன்,'' என்றார்.
source : Dinamalar |
|
|
|
|
|