|
காரைக்குடிக்கு 550 ரூபாயில் சொகுசு ஆம்னி பஸ் Feb 22, 11 |
|
ஆம்னி பஸ்களை இயக்கும் டிராவல்ஸ் நிறுவனத்தார், ரயிலில் படுத்துக் கொண்டே பயணம் செய்வது போன்ற இருக்கை வடிவமைப்பு, "ஏசி' வசதி, மேடு பள்ளமான சாலைகளில் பயணிக்கும் போது அதன் அழுத்தம் தெரியாமல் இருக்க, "வால்வோ' வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட பஸ்களை களத்தில் இறக்கியுள்ளனர்.
அந்த வரிசையில் கே.கே., டிராவல்ஸ் நிறுவனத்தார் "ஏசி' மற்றும் படுக்கை வசதியுடன், பஸ்சினுள் சிறுநீர் கழிப்பதற்கான கழிவறை வசதி, முகம் கழுவதற்கான "வாஷிங் பேஷன்' உள்ளிட்ட கூடுதல் வசதிகளை கொண்ட பஸ்களை இயக்குகின்றனர். இந்த பஸ்களில் கீழ் மற்றும் மேல் என இரண்டு அடுக்குகளில் மொத்தம் 32 இருக்கைகள், பயணிகள் படுத்துக் கொண்டே பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவசமாக வாட்டர் பாட்டில், தேவைப்படுவோருக்கு கம்பளி போர்வை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கின்றனர்.
இந்த பஸ்கள் பயணிகளிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. நாள்தோறும் இரவு 9.45 மணிக்கு கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காரைக்குடி வரை செல்லும் வகையிலும், காரைக்குடியில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு சென்னையை வந்தடையும் வகையிலும் பஸ்களை இயக்கி வருகின்றனர். சென்னையில் இருந்து காரைக்குடி செல்ல கட்டணமாக, 550 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
source : Dinamalar |
|
|
|
|
|