|
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் கும்பாபிஷேக பணியில் தாமதம் : பக்தர்கள் கவலை Feb 23, 11 |
|
திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இங்கு இரவில் தங்கி மறுநாள் அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு என்பதால் ,வாரம்தோறும் வியாழக்கிழமை இரவு ஏராளமான பக்தர்கள் தங்கியிருந்து, மறுநாளான வெள்ளிக்கிழமை பாகம்பிரியாள் தாயாரை வணங்கி வருகிறார்கள்.
15 ஆண்டுகளுக்கு முன் கோயிலில் பெயின்ட் மட்டும் அடிக்கபட்ட நிலையில் ,கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது ஐந்து நிலை கோபுரமாக கட்டி கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவது என தீர்மானிக்கபட்டது. 2009 நவம்பர் 11 அன்று அறநிலையதுறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இது நடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகியும் கோயில் முகப்பு மட்டும் உடைக்கபட்டது. மற்றபடி எந்தவித முன்னேற்றமும் இல்லை.
அக் கிராம மக்கள் கூறுகையில்,"" தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். உண்டியல் மூலம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பல லட்சரூபாய் வருவாய் கிடைக்கிறது . இருப்பினும் கும்பாபிஷேக பணிகள் நடக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது,'' என்றனர்.
source : Dinamalar |
|
|
|
|
|