|
சிவகங்கையில் கிடப்பில் உள், வெளிவிளையாட்டு மைதானம் கட்டும் பணி : விளையாட்டு வீரர்கள் அதிருப்த Nov 2, 09 |
|
சிவகங்கை: சிவகங்கையில் உள்,வெளி விளையாட்டு மைதானம் கட்டும் பணி கிடப்பில் உள்ளதால் விளையாட இடமின்றி வீரர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.சிவகங்கையில் நடக் கும் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான மாநில, மாவட்ட விளையாட்டு போட்டிகள் கலெக்டர் அலுவலக மைதானம், பள்ளிகளில் நடத்தப்படுகிறது. இங்கு ஹாக்கி, டேபிள் டென்னிஸ், இறகு பந்து விளையாட்டுக்களுக்கு இடமில்லை. கலெக்டர் அலுவலக மைதானம் சிறிய விளையாட்டுக்களுக்கு கூட போதியதாக இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மட்டுமின்றி விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்கள் பல்வேறு போட்டிகளை நடத்த இடமின்றி தவித்து வருகின்றனர்.இங்கு உள்,வெளி விளையாட்டு மைதானம் கட்டவேண்டும் என அரசுக்கு பல ஆண்டாக கோரிக்கை வைத்தனர்.ரூ.2.49 கோடி ஒதுக்கீடு: அரசு இதை பரிசீலித்து விளையாட்டு மைதானம் கட்ட 2007ம் ஆண்டு அனுமதி அளித்தது. அதற்கு பின் பணிகள் துவங்காததால் வீரர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். மத்திய,மாநில அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் அரங்கிற்கு 47 லட்சம், வெளி அரங்கிற்கு 1.22 கோடி, நீச்சல் குளத்திற்கு 80 லட்சம் என 2.49 கோடி ரூபாய் ஒதுக்கியது.
இங்கு நீச்சல் குளம் கட்டும் பணி மட்டுமே முழுமை அடைந்துள்ளது. உள், வெளி விளையாட்டு மைதானம் கட்டும் பணி கிடப்பில் உள்ளது.விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன்: "" நீச்சல் குளம், உள், வெளி விளையாட்டு அரங்கிற்கென 7 ஊழியர்கள் பணியிடம் அரசிடம் கோரியுள்ளோம். இந்த பணியிடத்தை அரசு ஒதுக்கிய பின் சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை பணிகள் மூன்று மாதத்திற்குள் முடித்து திறந்துவிடுவோம்'' என்றார்.
Source:Dinamalar 02/11/ 09 |
|
|
|
|
|