|
கண்டவராயன்பட்டி - வரலாற்றுக் கல்வெட்டு திறப்பு விழா Nov 2, 09 |
|
திருப்பத்தூர், அக். 31: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள கண்டவராயன்பட்டி ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலில் லட்சார்ச்சனை விழாவும், வரலாற்றுக் கல்வெட்டு திறப்பு விழாவும் நடைபெற்றது.
குன்றக்குடி பென்னம்பல அடிகளார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தொழிலதிபர் என்.எஸ்.எஸ். சிவசுப்பிரமணியன் செட்டியார் தலைமை வகித்தார். பேராசிரியர் குமரப்பன் வரவேற்றார். பொற்கிழிக் கவிஞர் அரு. சோமசுந்தரம், கந்தபுராணம் பற்றி சிறப்புரையாற்றினார்.
1932-ல் கட்டப்பட்ட ஸ்ரீதண்டபாணி கோயிலில், பல தேசிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. 1946-ல் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 1947-ல் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. 1948-ல் அரிஜன பிரவேசமும், 1965-ல் வினோபாஜி வருகை உள்ளிட்ட வரலாற்று நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன. இவை பற்றிய கல்வெட்டினை, குன்னக்குடி பென்னம்பல அடிகளார் திறந்து வைத்தார்.
கலைஞர் விருது பெற்ற பென்னம்பல அடிகளாருக்கும், தில்லி பென்குயின் பதிப்பகத்தாரால் "வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்ற பொற்கிழி கவிஞர் சோமசுந்தரத்துக்கும், கோயில் சார்பில் பாராட்டி பொன்னாடை போர்த்தப்பட்டது.
ஆசிரியர் சொக்கலிங்கம் நன்றி கூறினார்.
Source : Dinamani: 1/11 |
|
|
|
|
|