|
ஏப்ரல் 13ம் தேதி எஸ்.எம்.எஸ்., சேவைக்கு தடை Mar 14, 11 |
|
ஓட்டுப்பதிவு நாளில் எஸ்.எம்.எஸ்., சேவைக்கு தடை விதிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் நேர்மையாக நடைபெற, தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஓட்டுச்சாவடியில் தேர்தல் அலுவலரைத் தவிர, மற்றவர்கள் மொபைல் போன் பயன்படுத்த அனுமதி இல்லை. மேலும், ஓட்டுப்பதிவு அன்று மொபைல் போன்களில் எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்தல் செய்திகள் பரவுவதைத் தடுக்க, எஸ்.எம்.எஸ்., சேவைக்கு தடை விதிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
source : Dinamalar |
|
|
|
|
|