Nagaratharonline.com
 
BSNL : அன்பு ஜோடி' சிம்கார்டு திருச்சியில் அறிமுகம்  Mar 15, 11
 
திருச்சி: பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அன்பு ஜோடி எனப்படும் புதிய பீரிபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

அன்பு ஜோடி திட்டத்தில இணைப்பைப் பெறும் வாடிக்கையாளர்கள் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு பி.எஸ்.என்.எல்., தரைவழி தொலைப்பேசி அல்லது வில்ஃபோனுக்கு அளவில்லாமல் முற்றிலும் இலவசமாக பேசிக்கொள்ளலாம்.இதுதவிர தமிழகத்திலுள்ள இரண்டு பி.எஸ்.என்.எல்., தரைவழி, வில் அல்லது மொபைல்ஃபோன்களுக்கு நிமிடத்துக்கு 20 பைசாவுக்கு பேசலாம். மேலும், தமிழகத்துக்கு வெளியே உள்ள ஒரு பி.எஸ்.என்.எல்., தரைவழி, வில் அல்லது மொபைல்ஃபோனுக்கு நிமிடத்துக்கு 30 øபாவுக்கு பேசலாம். மற்ற அனைத்து லோக்கல் மற்றும் எஸ்.டி.டி., அழைப்புக்களுக்கான கட்டணம் பி.எஸ்.என்.எல்., எண்களுக்கு நொடிக்கு ஒரு பைசா வீதமும் மற்ற எண்களுக்கு நொடிக்கு 1.2 பைசா வீதமும் ஆகும்.அன்பு ஜோடி இணைப்புடன் அறிமுக சலுகையாக 1,000 லோக்கல் எஸ்.எம்.எஸ்., 1,000 தேசிய எஸ்.எம்.எஸ்., மற்றும் 1,000 மெகாபைட் தகவல் டவுன்லோடு ஆகியவை அனைத்தும் முற்றிலும் இலவசமாக 30 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன.

source : Dinamalar