|
செட்டிநாடு ரயில் நிலையப் பகுதியில் புதைந்து கிடக்கும் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தா Mar 22, 11 |
|
2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு ரயில் நிலையப் பகுதியில் புதைந்து கிடைக்கிறது. தொல்லியல்துறையினர் ஆய்வு நடத்தி மேலும் தகவல்களை வெளிக் கொண்டுவரவேண்டும் என்று தமிழ்த் துறை ஆராய்ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருச்சி-ராமேசுவரம் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக செட்டிநாடு ரயில் நிலையப் பகுதியில் மண்ணைத் தோண்டிய போது பழங்கால பெரிய மண்பானைகள் உடைந்த நிலையில் இருந்தன.
தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி வருபவரும்,தொன்மையான புராண ஆய்வாளருமான கி.காளைராஜன் ரயிலில் அவ்வழியே பயணித்தபோது தாழி அமைப்பிலிருந்ததைப் பார்த்து கோயில் கலை மற்றும் கல்வெட்டு ஆய்வாளரும், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரி முன்னாள் முதல்வருமான பேராசிரியை நா.வள்ளியிடம் தெரிவித்தார்.
அந்தத் தாழி போன்ற அமைப்பிலிருந்த பானைகளை, ஞாயிற்றுக்கிழமை இருவரும் சென்று பார்வையிட்டு சோதித்துப் பார்த்தனர்.
இது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழியாக இருக்கிறது.
தொல்லியல் துறைதான் இதுபற்றி முழுமையான ஆய்வு செய்யவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
source : Dinamani |
|
|
|
|
|