|
25 பைசா நாணயங்களை ஜூன் 29-க்குள் மாற்றிக் கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு Mar 22, 11 |
|
25 பைசா மற்றும் அதற்கு குறைவான மதிப்புள்ள நாணயங்களை வைத்திருப்போர் அவற்றை ஜூன் 29-ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் என சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் கே.ஆர். ஆனந்தா தெரிவித்தார்.
மத்திய அரசு இதுவரை வெளியிட்ட 25 பைசா மற்றும் அதற்கு குறைவான மதிப்புகள் கொண்ட நாணயங்களை வரும் ஜூன் 30-ம் தேதி முதல் புழக்கத்திலிருந்து அகற்றிட முடிவு செய்துள்ளது.
அரசின் இந்த முடிவையடுத்து, தற்போது இந்த நாணயங்களை வைத்திருப்போர், அவற்றை மாற்றிக் கொள்ள உரிய ஏற்பாடுகளைச் செய்யும்படி, இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதன்படி, நாணயங்களை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வங்கிகள் குறித்த விவரங்கள்:
அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பரோடா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அண்ட் ஜெய்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்.
ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, தனலட்சுமி வங்கி, பெடரல் வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, எச்.டி.எஃப்.சி.வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, ஐ.என்.ஜி. வங்கி, ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி, ப்ரதமா வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கர்நாடகா வங்கி, திரிபுரா கிராமின் வங்கி, நைனிடால் வங்கி, ராஜஸ்தான் மாநில கூட்டுறவு வங்கி.
இந்த வங்கிகளின் கிளை அலுவலகங்களில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 25 பைசா மற்றும் அதற்குக் குறைவான நாணயங்களை ஜூன் 29-ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம். ஜூன் 30-ம் தேதியில் இருந்து நாணயங்கள் மாற்றித்தரப்பட மாட்டாது.
source : Dinamani |
|
|
|
|
|