Nagaratharonline.com
 
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்  Mar 22, 11
 
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட, தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் மார்ச் 24ல் நடக்கிறது.

கோயில் நிர்வாக அதிகாரி பத்மநாபன் கூறியதாவது : பழமையான இக்கோயிலின் விமானம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக தங்க முலாம் பூசிய கொடிமரம் நிறுவப்பட்டுள்ளது. உபதெய்வங்களான பேச்சியம்மன், விநாயகர் சன்னதிகள் இடமாற்றப்பட்டுள்ளன. திருமண மண்டபம் அன்னதான மண்டபமாகவும், முடிக்காணிக்கை செலுத்தும் இடமாகவும் மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் மார்ச் 24 காலை 11.05 மணி முதல் 11.35 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.

source : Dinamalar