|
35 கம்பெனிகள் : "ஜாப் குவிஸ் - 2011' Mar 25, 11 |
|
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் சால்வர்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில், "ஜாப் குவிஸ் - 2011' எனும் தலைப்பில், இரண்டு நாள் வேலை வாய்ப்பு முகாம் நாளை துவங்குகிறது.
கல்லூரி முதல்வர் பாலுசாமி பேசியதாவது:மாணவர்களின் ஆளுமைத்திறன், கல்வி, ஆங்கிலத் தொடர்பு ஆகியவற்றை பொறுத்தே வேலை வாய்ப்புகள் அமையும். மாணவர்களிடையே போட்டியிருந்தால் மட்டுமே திறமைகளை வெளிப்படுத்துவர். அவர்களிடையே ஏற்படும் போட்டி, ஆரோக்யமானதாக இருக்க வேண்டும். மாணவர்கள் படித்து முடித்த பின் வெளியே சென்று வேலை தேடும் சுமையை குறைத்து, எல்லா கம்பெனிகளையும், ஒரே இடத்தில் கொண்டு வந்து, அனைவருக்கும் வேலை வாய்ப்பளிப்பதே எங்கள் நோக்கம். பிளஸ் 2 முதல் அதற்கு மேல், யார் எங்கு படித்து இருந்தாலும், வேலை வாய்ப்பில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் பேசினார்.
முகாமில்,35 கம்பெனிகள் கலந்து கொள்கின்றன. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன
source : Dinamalar |
|
|
|
|
|