|
ராமநவமியை முன்னிட்டு பந்தல்கால் முகூர்த்தம் Mar 26, 11 |
|
கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ஸ்ரீராமநவமி விழா தொடங்க உள்ளதை முன்னிட்டு நேற்று முற்பகலில் பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் ராமசுவாமி கோவில் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். இக்கோவிலில் ராமர், சீதாதேவி பட்டாபிஷேக திருக்கோலத்தில் காட்சி அளிப்பதால் தென்னக அயோத்தி என்றழைக்கப்படுகிறது. இங்கு 64க்கும் மேற்பட்ட தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் அழகுற அமைந்துள்ளன.
இவ்வாறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஸ்ரீராமநவமி விழா ஏப்ரல் மூன்றாம் தேதி துவங்கி 17ம் தேதி வரை பத்து நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் நேற்று முற்பகலில் நடந்தது.
source : Dinamalar |
|
|
|
|
|