Nagaratharonline.com
 
ரூ. 15 ஆயிரத்தில் Laptop PC : HCL INFO  Mar 30, 11
 
ரூ. 15 ஆயிரத்தில் ஆண்‌ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட டேப்லெட் பிசியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஹெச்சிஏல் எம்இ டேப்லெட் பிசிக்கள் 7 இஞ்ச் மற்றும் 10 இஞ்ச் என்ற 2 அளவுகளில் ரூ. 14,990, ரூ. 25,790 மற்றும் ரூ. 32,990 என்ற 3வித விலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த டேப்லெட் பிசி, 800 மெகாஹெர்ட்ஸ் புராசசர், 7 இஞ்ச் டிஸ்பிளே, 256எம்பி டீடீஆர்2 ராம், என்ஏஎன்டி பிளாஷ் இன்பில்ட் 2 ஜிபி மெமரி, 8 ஜிபி வரை நீட்டிக்கத்தக்க மைக்ரோ எஸ்டி கார்டு, 802.11பி/ஜி வை பை சப்போர்ட் வடிவமைப்பை கொண்டதாக இருக்கும் என்றும், வரும் காலங்களில் அதிநவீன தொழில்நுட்பங்கள் இதில் உட்புகுத்தப்படும் என்று ஹெச்சிஎல் இன்போ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, டில்லி என்சிஆர் பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

source : Dinamalar