Nagaratharonline.com
 
அரசு மருத்துவமனைகளில் ரூ.6.16 கோடியில் பணிகள்  Nov 7, 09
 
அரசு மருத்துவமனைகளில் ரூ.6.16 கோடியில் பணிகள்


சிவகங்கை: மாவட்டத்தில் ஆறு அரசு மருத்துவமனைகளில் 6.16 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. சுகாதார திட்டத்தின் கீழ் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை, மானாமதுரை உட்பட 16 அரசு மருத்துவமனை, தாய்சேய் நல விடுதிகளின் மேம்பாட்டுக்காக 11.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.




சிவகங்கை தாய்சேய் நல பிரிவில் நவீன சமையல் அறை, மருந்து கிடங்கு, காரைக்குடியில் நூறு படுக்கையுடன் கூடிய பிரசவ வார்டு, சைக்கிள் ஸ்டாண்டு, டாக்டர் தங்கும் அறை, சிங்கம்புணரி, திருப்புத்தூர், மானாமதுரை, தேவகோட்டையில் தலா 24 படுக்கையுடன் பிரசவ வார்டு, குளிரூட்டப்பட்ட பிரேத அறை, கட்டட சீரமைப்பு பணிகள் 6.16 கோடி ரூபாயில் நடந்து வருகின்றன. இவை விரைவில் நிறைவடையும். மீதமுள்ள 5.84 கோடி ரூபாயில் இளையான்குடி, கண்டனூர், கானாடுகாத்தான், பூலாங்குறிச்சி அரசு மருத்துவமனை, பாகனேரி, பள்ளத்தூர், பூலாங்குறிச்சி, கொத்தமங்கலம், பலவான்குடி தாய் சேய் நல விடுதிகளில் மேம்பாட்டு பணிகள் துவக்கப்பட உள்ளன.

Source:Dinamalar 07/11/ 09