|
ஓட்டுப் போட பயன்படும் 13 ஆவணங்கள் : தேர்தல் கமிஷன் Apr 5, 11 |
|
சட்டசபை தேர்தலில் ஓட்டுப் போட புகைப்படம் ஒட்டிய வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காதவர்கள், அதற்கு பதிலாக 13 ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டுப் போடலாம்
1. பாஸ்போர்ட். 2. ஓட்டுனர் உரிமம். 3. வருமானவரி "பான்' கார்டு. 4. மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சிகள் வழங்கிய புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை. 5. தபால் அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், கிசான் பாஸ்புக். 6. புகைப்படம் ஒட்டிய பென்ஷன் ஆவணம். 7. சுதந்திர போராட்ட வீரருக்கானபுகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை. 8. நிலப்பட்டா, பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் உள்ளிட்ட சொத்து ஆவணம். 9. எஸ்.சி.,எஸ்.டி., மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான புகைப்படம் ஒட்டிய சான்றிதழ். 10. ஆயுதம் வைத்திருப்பதற்கான உரிமம். 11. உரிய துறை வழங்கிய மாற்றுத் திறனாளி சான்றிதழ். 12. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கான அடையாள அட்டை. 13. தொழிலாளர் துறை வழங்கிய மருத்துவக் காப்பீடு "ஸ்மார்ட் கார்டு'.இந்த ஆவணங்கள் அனைத்திலும் வாக்காளரின் புகைப்படம் இடம் பெற்றிருக்க வேண்டும். அத்தனை ஆவணங்களும் கடந்த பிப்., 28க்கு முன் வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
source : Dimamalar |
|
|
|
|
|