Nagaratharonline.com
 
தேவகோட்டை வ.பெரி.மு.தெரு, மீன்புசலார் வீதி பெயர் குழப்பம் : 15 ஆண்டு போராட்டம்  Apr 6, 11
 
தேவகோட்டை 16 வது வார்டில் தெரு பெயர் குழப்பத்தால், வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பயன்படுத்த முடியவில்லை. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக, வ.பெரி.மு.தெரு, மீன்புசலார் வீதி உள்ளது. இங்குள்ளவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் நடுபஜார், காமராஜர் தெருவில் உள்ளன. இப்பகுதியினர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து அலுத்து விட்டனர். "படிவம் 8' கொடுத்து தவறுகளை திருத்தலாம் என, அதிகாரிகள் கூறினர். ஆனால், அப்படி செய்தும் திருத்தம் செய்யப்படவில்லை.

வாக்காளர் அடையாள அட்டை பத்திர பதிவு, பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு பயன்படுகிறது. தெரு பெயர் ரேஷன் கார்டில் ஒரு பெயரும்; வாக்காளர் அட்டையில் ஒரு பெயரும் உள்ளது. இதனால் வங்கி கணக்கு கூட துவக்க முடியவில்லை.

இதுகுறித்து கவுன்சிலர் கேசவன் கூறியது: பாதிக்கப்பட்டவர்கள் நேரில் மனு கொடுத்தும் பலனில்லை. தொடர்ந்து தேர்தல் கமிஷன், கலெக்டர் என, மாறி மாறி கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. தேர்தலின் போது ஓட்டு போடுங்கள், பிறகு சரிசெய்கிறோம் எனக்கூறி, சமாளிக்கின்றனர், என்றார். அலுவலர்கள் கூறுகையில், ""பட்டியலில் திருத்தம் செய்யும் போது, சாப்ட்வேரில் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு வீதிகளையும் சேர்க்க தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது,'' என்றார்.

source : Dinamalar