Nagaratharonline.com
 
எஞ்சின் கோளாறு: ஸ்விப்ட், ரிட்ஸ் டீசல் கார்களை திரும்பெறும் மாருதி  Apr 7, 11
 
எஞ்சினில் தவறான உதிரிபாகம் பொருத்தப்பட்டுள்ளதாக எழுந்த பிரச்சினையையடுத்து, 13,157 கார்களை திரும்பபெற முடிவு செய்துள்ளதாக மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

"கடந்த ஆண்டு நவம்பர் 13ந் தேதி முதல், டிசம்பர் 4ந் தேதி வரை தயாரிக்கப்பட்ட ஸ்விப்ட், ரிட்ஸ் மற்றும் ஸ்விப்ட் டிசையர் டீசல் கார்களுக்கான எஞ்சினில் கனெக்டிங் ராடை இணைக்க பொருத்தப்பட்டுள்ள போல்ட் சரியானதாக இல்லை என தெரிய வந்துள்ளது.

எனவே, மேலே குறிப்பிட்டுள்ள காலத்தில் தயாரிக்கப்பட்ட எஞ்சினை ஆய்வு செய்வதற்காக, 13,157 கார்களை திரும்பபெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கார்களின் எஞ்சினில் தவறான போல்ட் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தால், அதற்கு பதில் புதிய போல்ட் மாற்றித்தரப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary
The country's largest carmaker Maruti Suzuki India today said it will recall 13,157 units of its three diesel driven models of Dzire, Swift and Ritz due to a possible faulty engine part

source : thatstamil.