Nagaratharonline.com
 
கட்டட வசதி இன்றி கர்ப்பிணிகள் அவதி  Nov 7, 09
 
கட்டட வசதி இன்றி கர்ப்பிணிகள் அவதி


இளையான்குடி : தாயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டட வசதி இல்லாமல் கர்ப்பிணிகள் அவதிப்படுகின்றனர். இங்கு 12 ஊராட்சிகளை சேர்ந்த கிராமத்தினர் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இங்கு போதிய வசதிகள் இல்லை. பழைய கட்டடத்தில் ஒரு சிறிய அறையில் பிரசவம் நடப்பதால் கர்ப்பிணிகள் அவதிப்படுகின்றனர். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் வந்தால், வராண்டாவில் துணியால் தடுப்பு ஏற்படுத்தி பிரசவம் பார்க்கும் அவலம் உள்ளது. அரசு மருத்துமனையில் நடக்கும் பிரசவங்களுக்கு நிதி உதவி கிடைப்பதால் இங்கு அதிகளவில் கர்ப்பிணிகள் வருகின்றனர். ஆனால் அதற்கேற்ற வசதி இல்லாமல் டாக்டர், ஊழியர்கள் திணறுகின்றனர்.


Source Dinamalar 07/11/09