Nagaratharonline.com
 
ஸ்ரீரங்கம் காவிரியில் கஜேந்திர மோட்சம்  Apr 20, 11
 
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியில் நம்பெருமாள் எழுந்தருளி, கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்த வைபவம் வெகு சிறப்பாக நடந்தேறியது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று காலை, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அம்மாமண்படம் காவிரி படித்துறையில் எழுந்தருளி, மதியம் வரை பக்தர்களுக்கு ஸேவை சாதிப்பார். மாலை ஆற்றுக்குள் எழுந்தருளி, கஜேந்திரனுக்கு மோட்சமளிப்பார்.

இந்தாண்டுக்கான கஜேந்திர மோட்சம் நேற்று மாலை வெகு சிறப்பாக நடந்தது. ""அபயம்' என்று குரல் எழுப்பும் பக்தர்களை காக்க பரமன் ஓடோடி வருவார் என்பதை உணர்த்தும் வகையில்' நேற்று மாலை நம்பெருமாள் காவிரியில் எழுந்தருளினார். ஆற்றுக்குள் இருந்த யானை ஆண்டாளுக்கு கஜேந்திர மோட்சம் தந்தருளினார். இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். காவிரி ஆறு முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

source : dinamalar