|
காரைக்குடி - கழிப்பிடமான பஸ் ஸ்டாண்ட் Nov 9, 09 |
|
கழிப்பிடமான பஸ் ஸ்டாண்ட்
காரைக்குடி: குன்றக்குடி பஸ் ஸ்டாண்ட், கழிப்பிடமாக மாறி வருகிறது. இங்குள்ள முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக, சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஐந்து லட்ச ரூபாயில் பஸ் ஸ்டாண்ட் விரிவுபடுத்தப்பட்டது. குடிநீர், கழிப்பறை, உட்கார சிமென்ட் மேடை அமைக்கப்பட்டன. தற்போது பஸ் ஸ்டாண்ட் புதர் மண்டிக்கிடக்கிறது. இரவில் அப்பகுதியினர் கழிப்பிடமாக பயன்படுத்துவதால், துர்நாற்றம் வீசுகிறது. பஸ் ஸ்டாண்டை சீரமைக்க ஊராட்சியினர் முன்வரவேண்டும். பயணிகள் அவதி: மதுரையில் இருந்து காரைக் குடி செல்லும் அனைத்து பஸ்களும் குன்றக்குடியில் நிற்கின்றன. நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இங்கு நிழற்குடை அமைப்பது அவசியம்.
Source: Dinamalar 09/11/09 |
|
|
|
|
|