Nagaratharonline.com
 
ஒக்கூர் கூட்டுறவு வங்கியில் இரவு காவலாளி கொலை?  Apr 25, 11
 
ஒக்கூர் மெயின்ரோட்டில் தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. இங்கு, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அடைக்கன் மகன் பாண்டி(45) இரவு காவலராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் காவல் பணிக்கு வந்தார். நேற்று அதிகாலை அப்பகுதியினர், பார்த்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இன்ஸ்பெக்டர் சங்கர் விசாரிக்கிறார். விசாரணை: போலீஸ் விசாரணையில் இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். பாண்டியின் கால் இரண்டும் கட்டிய நிலையில் இறந்து கிடந்தார். மேலும், அவரது உடலுக்கு மேல் அவர் படுக்கும் மர பெஞ்ச் கிடந்தது. வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கில், காவலாளியை கொலை செய்துவிட்டு, கொள்ளை செய்ய முயற்சித்திருக்கலாம். ஆட்கள் நடமாட்டம் இருந்திருக்கலாம். இதனால், கொள்ளையர்கள் வங்கியை கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

source ; dinamalar