Nagaratharonline.com
 
மீனாட்சி அம்மனுக்கு வைர நெக்லஸ் உபயம்  Apr 25, 11
 
மதுரை மீனாட்சி அம்மனுக்கு உபயதாரர் ஒருவர், பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் வைர நெக்லஸை கோயில் நிர்வாக அலுவலர் பத்பநாபனிடம் வழங்கினார்.
இதில், நான்கு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 195 கிராம் 310 மி., எடை கொண்ட தங்கம் உள்ளது. ஐந்து லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 451 வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.


source : Dinamalar