|
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 70 ரூபாயை நெருங்கும் Apr 26, 11 |
|
இந்தியன் ஆயில் கழக தலைவர் ரன்பீர சிங் புடோலா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:சட்டசபை தேர்தல் காரணமாக, கடந்த ஜனவரி முதல், பெட்ரோல் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மக்கள் மற்றும் அரசை பாதிக்காத வகையில், நாங்கள் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாங்கள் எடுக்கும் சில நடவடிக்கைகள், மக்களையும், அரசையும் பாதிக்கக் கூடாது என்பதற்காக, பொறுமை காக்க வேண்டியுள்ளது.இருப்பினும், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.கடந்த மார்ச் வரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்திய ஆயில் கழகத்திற்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை மூலம், 7 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரும்.இவ்வாறு ரன்பீர சிங் புடோலா கூறினார்.
மேற்கு வங்கத்தில், மே மாதம் 10ம் தேதியுடன், சட்டசபை தேர்தல் முடிகிறது. அன்று இரவிலிருந்து, பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.எண்ணெய் நிறுவனங்களின் கூற்றுப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 70 ரூபாயை நெருங்கும் எனத் தெரிகிறது.
source ; Dinamalar |
|
|
|
|
|