Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் பட்டமரத்தான் பூத்திருவிழா  Apr 30, 11
 
பொன்னமராவதி பட்டமரத்தான் நினைவாலயப் பூத்திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பொன்னமராவதியில் உள்ள பட்டமரத்தான் நினைவாலயம் பூத் திருவிழா ஆண்டுதோறும் 3 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். இப்பகுதி பொதுமக்களும், அரசு அலுவலர்களும் பூத்தட்டும், பால்குடமும் ஏந்தி வந்து இங்கு வழிபடுவர். ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

அதுபோல, நிகழாண்டு விழா வெüóளிக்கிழமை தொடங்கிய விழாவில் காலை, மாலைகளில் அழகிய நாச்சியம்மனுக்கு அபிசேஷக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து நண்பகலில் அன்னதானம் நடைபெற்றது.

அன்று இரவு வலையபட்டி பிஆர். சிந்துவின் ஆன்மிக சொற்பொழிவு, நாகசுர இன்னிசை நிகழ்ச்சி, சிவன் கோயில் மேடையில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

source : Dinamani