Nagaratharonline.com
 
உ.சிறுவயலில் தமிழ் இலக்கிய விழா  May 7, 11
 
உ. சிறுவயலில் தமிழ் இலக்கியமன்றத்தின் சார்பில் 50-ம் ஆண்டு தமிழ் இலக்கிய விழாவும், 30-ம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் விழாவும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) மற்றும் திங்கள்கிழமை (மே 9) ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது.

இவ்விழாவையொட்டி பெண்களுக்குத் தாலாட்டுப் போட்டி, மாணவ, மாணவிகளுக்கு கண்ணதாசன், பாரதி மற்றும் தமிழிசைப்பாடல் ஒப்பித்தல் போட்டிகளும் நடைபெறும்.

மாலையில் நடைபெறும் தொடக்க விழாவுக்கு கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் தலைமை வகித்துப் பேசுகிறார். கவிஞர் அரு. நாகப்பன் வரவேற்றுப் பேசுகிறார்.

தொழிலதிபர் லெ. சபா ரெத்தினம் செட்டியார் விழாவை துவக்கிவைத்தும், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இலக்கிய விருதுகள் வழங்கியும் பேசுகின்றனர். லேனா தமிழ்வாணன், திரைப்பட இயக்குநர் கண்மணிசுப்பு கண்ணதாசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

2-ம் நாள் நிகழ்ச்சியாக சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறும். இதில் நடுவராக சென்னை தொலைக்காட்சி துணை இயக்குநர் டாக்டர் பாலரமணி செயல்படுகிறார். பேராசிரியைகள் சரசுவதி நாகப்பன், ஜீவா பழனிவேலு, நாச்சம்மை கண்ணன் ஆகி யோர் ஓரணியாகவும். புலவர் துரை. சிவானந்தம், கவிஞர் இளமாறன், பேராசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் ஓரணியாகவும் தங்கள் வாதத்தை முன்வைத்துப்பேசுகின்றனர்.

source : Dinamani