Nagaratharonline.com
 
பயன்பாட்டிற்கு வராத பாகனேரி ஆஸ்பத்திரி  May 8, 11
 
பாகனேரி அரசு ஆஸ்பத்திரியில் ரூ. 54 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு கடந்த ஜனவரி 5ம் தேதி துணை முதல்வரால் திறக்கப்பட்டது. மாதங்கள் ஐந்தை தாண்டியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

இங்கு ஸ்கேன், இ.சி.ஜி, குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.இரவு நேரங்களில் சிவகங்கை,திருப்பத்தூர்,காரைக்குடிக்கு அவசர சிகிச்சைக்கு செல்லவேண்டிய நிலையை போக்க கட்டப்பட்ட மருத்துவமனை திறப்பு விழா நடந்து ஐந்து மாதத்திற்கு மேலாகியும் பூட்டப்பட்டுள்ளது. பல லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களும் பயனற்று காணப்படுகிறது. துப்புரவு பணியாளர்,அலுவலக உதவியாளர் பணியிடமும் காலியாக உள்ளதால் மக்கள் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த மருத்துவமனை செயல்பட்டால் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெறுவதோடு 24 மணி நேரமும் செயல்படும் என்பதால் குழந்தைகள்,முதியவர்கள்,கர்ப்பிணிகள் எந்த நேரத்திலும் மருத்துவ வசதி பெற வசதியாக இருக்கும்.

அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, திறப்பு விழா நடைபெற்ற இம் மருத்துவமனை செயல்பட மருத்துவத்துறை,மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

source : Dinamalar