Nagaratharonline.com
 
திருப்புத்தூர் - மதுரை நேரடி பஸ் வசதி  May 10, 11
 
திருப்புத்தூரிலிருந்து மதுரைக்கு நேரடி பஸ் வசதி செய்ய வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர். திருப்புத்தூர் சிவகங்கை மாவட்டத்தின் போக்குவரத்து மையமாக உள்ளது. தஞ்சாவூர்-மதுரை தடத்திற்கான பஸ்கள் திருப்புத்தூர் வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும் காரைக்குடி, தேவகோட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பொன்னமராவதி, திருச்சி, ஆகிய ஊர்களிலிருந்து மதுரை செல்லும் பஸ்கள் திருப்புத்தூர் வழியாக செல்கின்றன.10 நிமிடத்திற்கு ஒரு பஸ் திருப்புத்தூரைக் கடந்து செல்கின்றன.இந்த பஸ்களால் திருப்புத்தூர் மற்றும் சுற்றுப்புறமுள்ள கிராமத்தினர் முழுமையான பயனை அடையவில்லை.

திருப்புத்தூரிலிருந்து மதுரைக்கு பஸ் ஏறும் பயணிகள் உட்கார்ந்து செல்வது அரிதாக உள்ளது. முகூர்த்த நேரங்களில் பஸ்ஏறவேஅனுமதிப்பதில்லை. வயதானவர்கள்,பெண்கள்,நோயாளிகள் யாராக இருந்தாலும் நின்று கொண்டே செல்ல வேண்டும். இதை விட வருத்தமானது, மதுரையிலிருந்து திருப்புத்தூர் வரும் பயணிகள் படும் அவதிதான். பஸ்சில் ஏறவே அனுமதிப்பதில்லை. பஸ் புறப்படும் நேரத்தில் மட்டுமே அனுமதிப்பது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. இந்நிலையை மாற்ற பல முறை போராடியும் எந்த பலனும் இல்லை. திருப்புத்தூரிலிருந்து மதுரைக்கு நேரடி பஸ் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

souirce ;Dinamalar