Nagaratharonline.com
 
மானாமதுரை: கார்த்திகை மெழுகு விளக்குகள் மாறுது பழைய வழக்கம்  Nov 10, 09
 
கார்த்திகை மெழுகு விளக்குகள் மாறுது பழைய வழக்கம்


மானாமதுரை: கார்த்திகை திருநாளை முன்னிட்டு மெழுகு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி இடைக்காட்டூரில் ஜரூராக நடந்து வருகிறது.கார்த்திகையின் போது வீடுகளில் களிமண் அகல் விளக்குகளில்தீபமேற்றுவர். அவசர, நவீன உலகில் இவ்விளக்குகளில் எண்ணெய் ஊற்றி பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இதனால் மெழுஅ விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளது.இவ்வகை விளக்குகள் இடைக்காட்டூரில் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. மதுரை உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த வியாபாரிகள் இங்கு மொத்தமாக வாங்கி செல்கின்றனர். வாடிக்கையாளர்களை கவர பல வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன.விளக்கு தயாரிக்கும் முத்துமீனாட்சி கூறுகையில், ""துவக்கத்தில் சிறியதாக ஆரம்பித்தோம். இப்போது அதிகளவில் ஆர்டர்வருகிறது. மெழுகு விலை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. தொடர் மழையால் விற் பனை மந்தமாக உள்ளது. கார்த்திகை துவங்கினால் விற்பனை அதிகரிக்கும். 4, 6, 10 கிராம் எடையுள்ள 10 விளக்குகள் 10 முதல் 15 ரூபாய் வரை விற்கிறோம்,'' என்றார்.

Source:Dinamalar 10/11/09