|
நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவில் பெரிய திருவிழா May 17, 11 |
|
நாச்சியார்கோவில் ஆகாசமாரிய ம்மன் கோவில் பெரிய திருவிழா, வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி துவங்குகிறது.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. அம்மனுக்கு என்று தனி ஆலயம் கிடையாது. ஆனால் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் உற்சவங்கள் பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தனது பக்தன் மீது கொண்ட பாசத்தால் சமயபுரத்தாள் திருநரையூர் எனும் நாச்சியார்கோவிலுக்கு வந்ததாக வரலாறு. வைகாசி மாதம் அமாவாசையை அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்கி 10 நாட்களுக்கு ஆகாச மாரியம்மன் உருவத்தை தர்ப்பையால் உருவாக்கி விழா நடைபெறுகிறது. மற்ற நாட்களில் ஆகாச மாரியம்மனுக்கு திருஉரு கிடையாது. கோவிலும் கிடையாது. அந்த சன்னதியில் அகல் விளக்கு மட்டும் ஜோதிச்சுடராக எரிந்து கொண்டிருக்கும். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு வணிகர் ஒருவர் சமயபுரம் மாரியம்மன் மீது மிகுந்த ப க்தி கொண்டதில் உருவானது இ வ்வாலய வரலாறு. சாதாரண வ ளையல் வணிகரின் பக்திக்காக சமயபுரத்தாள் திருநரையூருக்கு எழுந்தருளினாள். இன்றும் அத்திருவிழா பக்திப் பெருக்கின் உ ன்னத காட்சியாக தொடர்கிறது. திருநரையூரில் அம்மனுக்கென்று கோவில் கிடையாது. விழாக்காலம் நீங்கலாக மற்ற நாட்களில் அணையா விளக்காக காட்சி தரும் அம்மனை, பக்தர்களும் வழிபட்டு வருவர்.
10 நாட்கள் செப்புக்குடத்தில் உள்ள நீரையும், எலுமிச்சைப் பழத்தையும், குழந்தைப்பேறு இல்லாதவர் அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இவ்வாண்டு திருவிழா ஜூன் மாதம் 1ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி துவங்குகிறது. ஜூன் 3ம் தேதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருநரையூர் செங்கழுநீர் விநாயகர் கோயிலிருந்து அம்பாள் ஆலயம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜூன் 10ம் தேதி அம்பாள் அந்தம் வரை வளர்ந்து ராஜராஜேஸ்வரி அலங்காரத்துடன் சேவை சாதித்து அருள்தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 12ம் தேதி சகல பிராத்தனைகளும், காவடி வைபவங்களும் நடக்கிறது. ஜூன் 15ம் தேதி இரவு தேரில் அம்பாள் சமயபுரத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
source ; Dinamalar |
|
|
|
|
|