Nagaratharonline.com
 
சிவகங்கை: இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி நாளை நேர்காணல்  Nov 10, 09
 
இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி நாளை நேர்காணல்


சிவகங்கை: டி.வி.எஸ்., சமுதாய கல்லூரி சார்பில் இளைஞர்களுக்குஇலவச தொழில் பயிற்சி வகுப்புகள் சிவகங்கையில் நடக்கவுள்ளன.தகுதி: 18 முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண், பெண்கள். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப் பிக்கலாம்.80 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்கான நேர்காணல் நாளை (நவ.,12) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மகளிர் திட்ட அலுவலகத்தில் நடக்கும்.விரும்புவோர் அசல் சான்றுடன் வரவேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு ஆட்டோமொபைல் பழுது நீக்கம், எலக்ட்ரிக்கல் வயரிங், பிளம்பிங், லேப் டெக்னீசியன் பிரிவுகளில் ஆறு மாத பயிற்சி அளிக்கப்படும்.போக்குவரத்து செலவாக மாதம் 500 ரூபாய் தரப்படும். பயிற்சி முடிப்போருக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். விபரத்திற்கு "0452- 2342 781, 2346 736' மற்றும் "04575- 240 962' என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மதுரை டி.வி.எஸ்., நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் முத்துராமன் தெரிவித்தார்.

Source: Dinamalar 10/11/09