Nagaratharonline.com
 
தேவகோட்டையில் ரோடுகள் ஆக்கிரமிப்பு  May 31, 11
 
தேவகோட்டையில் நாளுக்கு நாள் ரோட்டோர ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. நடைபாதையில் கடைகள் அமைப்பதாலும், அதன் அருகே வாகனங்களை நிறுத்துவதாலும் மக்கள் நடுரோட்டில் நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் வங்கிகள் ஒரே வீதியில் இருப்பதாலும் அனைத்து வாகனங்களும் ரோட்டிலேயே நிறுத்தப்படுகிறது. தியாகிகள் பூங்கா தென்புறம் ஒரு வழிப்பாதையாக இருந்தது. தற்போது அந்த நடை முறை கடைபிடிக்காததால் அவ்வழியும் நெருக்கடியாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஸ்கள் அனைத்தும் பஸ்ஸ்டாண்டிற்குள் சென்று வர போலீஸ் அதிகாரி நடவடிக்கை எடுத்தார். தற்போது பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்வதில்லை. வெளிப்பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி,இறக்கி செல்கின்றனர். நகராட்சியினரும்,போலீசாரும் ஒருங்கிணைத்து செயல்பட்டு ரோட்டோர ஆக்கிமிப்புகளை அகற்ற வேண்டும்.

source : Dinamalar