|
சிவகங்கை: தொற்று நோய் வரிசையில் 'மெட்ராஸ் ஐ' Nov 10, 09 |
|
தொற்று நோய் வரிசையில் 'மெட்ராஸ் ஐ'
சிவகங்கை: தொற்று நோய் வரிசையில் அடுத்ததாக "மெட் ராஸ் ஐ' என்ற கண் நோய் பரவி வருகிறது.சமீபத்தில் பன்றிக் காய்ச்சல், சிக் குன் -குனியா போன்றவை மக் களை அவதிப்பட வைத் தன. பருவ மழை துவக்கத் தின் போது பரவிய வைரஸ் காய்ச்சலும் துன்புறுத்தியது.தற்போது "மெட்ராஸ் ஐ' எனும் கண் நோய் தென் மாவட்டங்களில் பரவி வருகிறது.இந்நோய் தாக்கியவர்களுக்கு கண்கள் சிவப்பாகி, நீர் வடியும். கண் எரிச்சல், வலி ஏற்படும். உரிய சிகிச்சை பெற்றால் ஐந்து முதல் ஏழு நாட்களில் குணமடையலாம்.அரசு மருத்துவமனை டாக்டர் பிரேம்நாத் கூறுகையில், ""கண் வலி வந்தவர்கள் டாக்டரிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும்.
கோழி ரத்தம், தாய்ப்பால், விளக் கெண்ணெய் ஊற்ற கூடாது. டாக்டரின் ஆலோசனை இல்லாமல், கடைகளில் மருந்து வாங்க கூடாது. இது முற்றிலும் தவறு. இதனால் கண்கள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. கண்களை சுத்தமான நீரில் கழுவி, நல்ல துணியால் துடைக்க வேண்டும். கண் வலி தாக்கியவரை பார்ப்போருக்கும் நோய் பரவும் என்பது தவறு. ஒரே உடைகளை உபயோகிப்பது போன்றவற்றால் மட்டுமே பரவும்,'' என்றார்.
Source:Dinamalar 10/11/09 |
|
|
|
|
|