Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டை திருவிழா : சிறப்பு பஸ்கள்  Jun 7, 11
 
நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா வெள்ளி தேர் மற்றும் தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்கென சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இக்கோயில் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வாக, ஜூன் 12 அன்று (ஞாயிறு) மாலை 6.30 மணிக்கு அம்மன் வெள்ளி ரதத்தில் வீதி உலா வரும். இதை காண சிவகங்கை மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகைதருவர். ஜூன் 13 அன்று (திங்கள்) காலை 9.35மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.

இவ்விரு நிகழ்ச்சிகளை காணவரும் பக்தர்களின் வசதிக்கென அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இது குறித்து சிவகங்கை கிளை மேலாளர் சுந்தரபாண்டியன் கூறுகையில்,""ஜூன் 12 அன்று இரவு நடக்கும் வெள்ளி தேர், ஜூன் 13 அன்று காலை நடக்கும் தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் வருவர். இதற்காக மதுரை, சிவகங்கை, காளையார்கோவில், கல்லலில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வெள்ளி தேர் அன்று இரவு முழுவதும் சிவகங்கை - நாட்டரசன்கோட்டை இடையே "ஸ்பேர் பஸ்கள்' இயக்கப்படும்,'' என்றார்.

source ; Dinamalar