Nagaratharonline.com
 
அவசர வழி' இல்லாத ஆம்னி பஸ்கள் ஆபத்து  Jun 8, 11
 
ஆம்னி பஸ் வேலூர் அருகே ஓச்சேரியில் விபத்துக்குள்ளாகி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது; இவ்விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த ஒரே ஒரு பயணி மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார். பஸ்சில் பயணித்த மொத்த பயணிகளும் உயிரிழக்க என்ன காரணம் என, போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நள்ளிரவில் விபத்து நிகழ்ந்த நேரத்தில் பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். பஸ் திடீரென விபத்துக்குள்ளாகி உருண்டு தீப்பிடித்ததால் பலரும் நிலை குலைந் தனர். தப்பி வெளியேறுவதற்கான அவசர வழிகள் எங்கே உள்ளன என்பது தெரியாத நிலையில் தீயில் கருகி பலியானதாக கூறப்படுகிறது. டிரைவர் சீட் அருகில் உள்ள நுழைவு கதவும், பஸ்சில் இருந்து வெளியேறுவதற்கான கதவும் தானியங்கி முறையில் தாழிடப்பட்டிருந்ததாகவும், அதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் வெளியேற முடியாமல் போனது என்றும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம், தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளை விழிப்படையச் செய்துள்ளது. இச்சம்பவத்துக்கு பிறகாவது, ஏனைய ஆம்னி பஸ்களில் அவசர வழிகளை பயணிகளின் பார்வையில் தெரியும் வகையில் ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

source : Dinamalar