|
அடிப்படை வசதிக்கு அல்லாடும் கல்லல் மக்கள் Jun 20, 11 |
|
கல்லல் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலை உள்ளது.
கல்லல் போலீஸ் ஸ்டேஷன் தேவபட்டு ஊராட்சியிலும்,ஒன்றிய அலுவலகம் குருந்தம்பட்டு ஊராட்சியிலும்,அரசு அலுவலகங்கள் வெவ்வேறு பகுதியில் உள்ளதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது.
இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள், குடிநீர் குழாய்கள் அமைத்தல்,ரோடு மேம்படுத்துதல் எனஅனைத்திலும் குளறுபடி காணப்படுகிறது.
இங்கு கடைகள்,வணிக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமமக்கள் தங்களின் தேவைக்கு கல்லலுக்கு வந்து செல்கின்றனர். மக்கள் தொகை அதிகம் உள்ள ஊராட்சி பகுதியாக இருந்தும் அடிப்படை மருத்துவ வசதி கூட கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நிரந்தர பஸ் ஸ்டாண்ட் கிடையாது. கழிவு நீர் செல்வதற்கு முறையான கட்டமைப்பு கிடையாது.
ஊராட்சியாக உள்ளதால் அரசு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்கிறது.இதனால் அடிப்படை வளர்ச்சி பணிகளை செய்ய முடியாமல் ஊராட்சி திணறி வருகிறது. கல்லல் ஊராட்சியில் தரம் உயர்த்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்எதிர்பார்க்கின்றனர்.
source : Dinamalar |
|
|
|
|
|