Nagaratharonline.com
 
மதுரையில் அடுத்தமாதம் ஹெல்மெட் கட்டாயம்?  Jun 20, 11
 
மதுரையில் சாலை விபத்துகளை தடுக்க, ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்டுவதை அடுத்த மாதம் முதல் கட்டாயமாக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சென்னை, கோவையில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மதுரையில் இன்னும் அமல்படுத்தவில்லை.
வாகன சோதனையில், "ஹெல்மெட்' அணியாததற்கு ரூ.50 அபராதம் விதித்தாலும் பொதுமக்கள் அதை பொருட்டாக மதிப்பதில்லை. இதனால் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக, முக்கிய சந்திப்புகளில் பிட் நோட்டீஸ் கொடுக்கின்றனர். போலீஸ் அதிகாரி கூறுகையில், ""கமிஷனர் கண்ணப்பன் பயிற்சி முடிந்து, ஜூலை 2க்கு பிறகு மதுரை திரும்புகிறார். அவருடன் ஆலோசித்து, ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படும். அதுவரை பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதற்கிடையே, விதிமீறலுடன் வலம் வரும் ஆட்டோக்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறோம்,'' என்றார்.

source : Dinamalar