|
மதகுபட்டி பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு Jun 23, 11 |
|
மதகுபட்டி பஸ் ஸ்டாண்ட்டை சுற்றி ஏராளமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மதகுபட்டிக்கு சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொருட்கள் வாங்க வந்து செல்கின்றனர். மேலும் பட்டமங்கலம்,கண்டுப்பட்டி,நாட்டரசன் கோட்டை உள்ளிட்ட புனித தலங்களுக்கும் கிராம மக்கள் இங்கு வந்து தான் செல்ல வேண்டும். ஏராளமானோர் வந்து செல்லும் மதகுபட்டி பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் காணப்படுவதால் பயணிகள் நிற்க கூட இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். கடைகளின் முன்பு நிற்கும் பயணிகளிடம், வியாபாரிகள் கடையை மறைப்பதாக கூறுவதால் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. மேலும் பஸ் ஸ்டாண்ட்டை சுற்றியுள்ள கடைகளின் கழிவுகள் அனைத்தும் அருகிலேயே கொட்டப்படுவதால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இந்த பகுதி முழுவதும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதால் தொற்று நோயும் பரவும் நிலை உள்ளது. பயணிகளின் நலன் கருதி இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
source : Dinamalar |
|
|
|
|
|